CINEMA
55 கோடி கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்… நஷ்டமானது தான் மிச்சம்… நயன்தாரா படத்தால் வந்த நிலைமை..!!

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் டெஸ்ட். இந்த படத்தில் நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ளார்க்ள. சசிகாந்த் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு ஒளிபரப்பியது.
ஆனால் படம் வெளிவந்தும் ரசிகர்களுடைய நெகட்டிவ் விமர்சனம் தான் கிடைத்தது.நெட்பிளிக்ஸ் தான் இப்படத்தை ஓடிடி-யில் ஒளிபரப்பியது இந்நிலையில் படம் குறித்து பிரபலம் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 55 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். படம் வெளிவந்து ரெஸ்பான்ஸ் சரியாக இல்லாத காரணத்தால் இதுவரை 5 கோடி கூட நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் நிறுவனத்திற்கு ரூபாய் 50 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளார்.