LATEST NEWS
ஷாருக்கானின் ஜவான் படத்தில் 6 ஃபைட் மாஸ்டர்கள்.. வெறித்தனமா இருக்க போகுது.. சூப்பர் அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் யோகி பாபு, தீபிகா படுகோனே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதே சமயம் இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தில் பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், அவெஞ்சர்ஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் சண்டை காட்சிகளை உருவாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் சண்டை காட்சிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
அதாவது ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் அதிரடியான சண்டை காட்சிகளை ஜபான் திரைப்படத்தில் அமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பரபரப்பான பைக் காட்சிகள் மற்றும் இதயத்தை துடிக்க வைக்கும் வகையிலான டிரக் மற்றும் கார் சேஸ்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.