TRENDING
6 வயது சிறுவனின் நிலை …?? வீட்டில் விளையாடியவன் காட்டில் தோண்டியெடுக்கபட்டன்…??இந்த ஆண்டின் கடைசி நிமிடத்தில் கண்கலங்கிவைத்த கொடூரம் …

தூத்துகுடி, கோவில்பட்டி வடக்கு முதலபுரத்தை சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரேவதி இவர்களது ஒரே மகன் தான் 6 வயதான முகிலன். தற்பொழுது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை என்பதால் அவன் வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தான் . திடீர் என்று அவன் காணவில்லை அவனை தாயார் ரேவதி அனைத்து இடத்திலும் தேடியும் அவன் கிடைக்கவில்லை இதனால் அந்த தம்பதியர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் எங்கள் மகன் கடைசியாக அருள்ராஜ் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தான் அதிலிருந்து அவனை நங்கள் பார்க்கவில்லை என்று.
புகாரின் அடிப்படையில் அருள்ராஜினை போலீசின் பாணியில் விசாரித்ததில் அவர் அந்த சிறுவன் முகிலனை அடித்து கொன்று வீசி உள்ளார் . ஆனால் அவனை எங்கு வீசினார் என்பது மட்டும் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் சிறுவன் முகிலனின் உறவினர்கள் எம் கோட்டூர் விலக்கு பகுதியில் உள்ள தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்தினர். மேற்படி மோப்பநாய் உதவியுடன் போலீசார் முகிலனின் சடலத்தை தேடினார்கள் இதற்கு இடையில் அருள்ராஜின் முழு விவரத்தை தெரிந்து கொண்டனர் .
அருள்ராஜின் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகளும் 1 பாலியல் வழக்கும் நிலுவையில் உள்ளது இதில் இது மற்றும் ஒரு கொலை சம்பவம் ஆகும். சிறுவனின் உடல் முதலபுரம் வனப்பகுதியில் மூப்பனைவுதவியுடன் கண்டு பிடித்தனர். அருள்ராஜிற்கும் முகிலனின் மாமாவிற்கு தேர்தல் ரீதியாக மோதல்கள் இருந்து வந்தது. ஒரு வேலை அந்த காரணத்திற்காக தான் இந்த சிறுவனை கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது .ஆனால் விசாணைக்கு பின்பு தான் தெரியும் சிறுவனின் கொலை சம்பவத்தை பற்றி.