LATEST NEWS
“தளபதி 67” படத்தில் நடிக்க மறுத்த 90S ஹீரோ…. என்ன காரணம் தெரியுமா?….. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் தளபதி 67 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே தளபதி 67 திரைப்படத்தில் ஒரு வில்லன் கேரக்டருக்கு 90களில் பிரபல ஹீரோவான நடிகை கார்த்திக்கை லோகேஷ் சனிகியுள்ளார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கால் வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் கார்த்திக் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால் அவர் தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படும் நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.