LATEST NEWS
ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி வைத்திருக்கும் இந்த நாயின் விலை எவ்வளவு தெரியுமா?… கேட்டா ஆடிப் போயிடுவீங்க…!!!
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவையா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார்.
இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இந்நிலையில் பிரியங்கா நல்காரி அழகிய நாய்க்குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வைத்திருக்கும் நாய்க்கு குறித்தும் அதன் விலை பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.
அதாவது அவர் கையில் வைத்துள்ள நாய் கவாச்சோன் இனமாகும். அவர் வாங்கி இருக்கும் நாயின் குறைந்தபட்ச மதிப்பு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
