புஷ்பா 2 சாதனையும் காலி…! வெறும் 24 நாளில் இத்தனை ஆயிரம் கோடியா…? இந்திய சினிமாவையே ஆட்டிப்படைக்கும் ‘துரந்தர் 2’…!! – cinefeeds
Connect with us

CINEMA

புஷ்பா 2 சாதனையும் காலி…! வெறும் 24 நாளில் இத்தனை ஆயிரம் கோடியா…? இந்திய சினிமாவையே ஆட்டிப்படைக்கும் ‘துரந்தர் 2’…!!

Published

on

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், வெறும் 24 நாட்களில் மொத்தம் 1,711 கோடி ரூபாய் வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இந்திய வசூல் மட்டும் 1,297 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் வளைகுடா நாடுகளின் திரையரங்கு வருவாய் இல்லாமலேயே இந்தப் படம் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியுள்ளது மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட ‘பாகுபலி’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகிய படங்களின் வசூல் சாதனைகளைத் துரந்தர் இரண்டாம் பாகம் முறியடித்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்குக் கிடைத்த ஆதரவிற்கு நடிகை சாரா அர்ஜூன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in