சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…! புக்கிங் செய்வதற்கான கால அவகாசம் மாற்றம்…! இனி OTP கட்டாயம்… முழு விவரம் இதோ…!! – cinefeeds
Connect with us

Uncategorized

சமையல் கேஸ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…! புக்கிங் செய்வதற்கான கால அவகாசம் மாற்றம்…! இனி OTP கட்டாயம்… முழு விவரம் இதோ…!!

Published

on

மத்திய அரசு எரிவாயு பதுக்கல் மற்றும் முறைகேடான கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கும் நோக்கில், ஜூன் 1, 2026 முதல் சமையல் சிலிண்டர் விநியோகத்தில் ஐந்து புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக, இனி ஒரு முகவரியில் ஒருவருக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ள எல்பிஜி (LPG) இணைப்பு அனுமதிக்கப்படும் என்ற ‘ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு’ திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குழாய் வழி எரிவாயு (PNG) வசதி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தங்களின் எல்பிஜி சிலிண்டர்களைத் தராமல் இரண்டு இணைப்புகளையும் வைத்திருந்தால், பழைய கேஸ் இணைப்பு உடனடியாக ரத்து செய்யப்படும். அவ்வாறு எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி முறைக்கு மாறுபவர்களுக்கு எதிர்காலப் பயன்பாட்டிற்காக ‘மாற்று வவுச்சர்’ (Transfer Voucher) வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

Advertisement

புதிய விதிகளின்படி, சிலிண்டர் காலியாகி மீண்டும் புக் செய்வதற்கான கால வரம்பு நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறப் பகுதிகளில் 45 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு திருட்டை முற்றிலுமாகத் தடுப்பதற்காக, இனி சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது வெறும் ரசீதை மட்டும் காண்பித்தால் போதாது.

வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை (OTP) விநியோகஸ்தரிடம் கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடு வீடாகச் சென்று இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் தங்களின் எரிவாயு இணைப்பு விபரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in