CINEMA
அந்த மாதிரி சொல்லி எங்களை மட்டம் தட்டுவீங்களா? பெண்ணின் உழைப்புக்கு மரியாதை இல்லையா? நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளா மட்டும் பார்க்காதீங்க – ஆவேசப்பட்ட நடிகை தமன்னா!
சினிமாவில் நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி சிறப்பு நடனம் ஆடுவதை ஐட்டம் பாடல் என்று அழைப்பது வழக்கம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தமன்னா இதுபற்றி கூறுகையில், திரைப்படத்தில் வரும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை ஐட்டம் என்று அழைப்பது அந்தப் பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல. இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் பார்க்காமல் அவர்களின் நடிப்பு திறமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை தமன்னா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். காவலய்யா பாடலில் தமன்னா அணிந்திருந்த கவர்ச்சியான உடையும் அவரது ஆபாசமான உடல் அசைவுகளையும் பார்த்தால் அதை ஐட்டம் சாங் என்றுதான் சொல்ல தோன்றும் என்று ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
