LATEST NEWS
“தேவைப்பட்டால் திமுகவுக்கே போவோம்” பல கோடிகள் வாங்கி கட்சி தாவத் தயாரான தவெக எம்எல்ஏக்கள்..? உளவுத்துறை ரிப்போர்ட்டால் பனையூரில் நிலநடுக்கம்..!!
உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின்படி, ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த சில அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவத் தயாராக இருந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் தவெகவில் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “தேவைப்பட்டால் நாங்கள் திமுகவுக்கே போகவும் தயங்க மாட்டோம்” என்று அவர்கள் தவெக தலைமையிடம் நேரடியாகவே வாக்குவாதம் செய்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் உளவுத்துறையும், கட்சித் தலைமையும் அந்த அதிருப்திப் பட்டியலில் இருந்த எம்எல்ஏக்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளன. அதில் குறிப்பாக, உத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவுக்கு, சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ. 35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் சிலர் சில கோடிகளை முன்பணமாகக் கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து உளவுத்துறை போலீஸார் நடத்திய ரகசிய விசாரணையில், குறிப்பிட்ட சில எம்எல்ஏக்கள் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தற்பொழுது கசிந்துள்ளன.
