“மதுபோதையில் தூங்கிய கணவன்… கதவை வெளிப்பக்கமாக பூட்டி மனைவி செய்த வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி”..!! – cinefeeds
Connect with us

CRIME

“மதுபோதையில் தூங்கிய கணவன்… கதவை வெளிப்பக்கமாக பூட்டி மனைவி செய்த வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி”..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனின் கொடுமை தாங்காமல், 16 கால திருமண வாழ்க்கையை மனைவியே கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த அத்வேஷ் மற்றும் விநீதா தம்பதியருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், அத்வேஷ் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து விநீதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடும்ப வன்முறையால் அந்த வீடே தினசரி நரகமாக மாறியுள்ளது.

சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த அத்வேஷ், மது குடிப்பதற்காக மனைவியிடம் 100 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு விநீதா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அத்வேஷ் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் தினசரி நடக்கும் சண்டைகளாலும் கணவனின் சித்திரவதையாலும் விநீதா முற்றிலும் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளார். பின்னர், அத்வேஷ் குடித்த போதையில் அசைவற்று தூங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து, விநீதா அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அவர் தப்பித்து வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக அறையின் கதவையும் வெளிப்புறமாகப் பூட்டியுள்ளார்.

Advertisement

கணவன் தீயில் கருகி உயிரிழந்த பிறகு, விநீதா காவல்துறையினரிடமும் அண்டை வீட்டாரிடமும் ஒரு பொய் கதையைக் கூறியுள்ளார். தனது கணவர் பீடி பற்றவைத்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். ஆனால், விநீதா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காவல்துறையினர் விநீதாவைத் தங்களது பாணியில் விசாரித்தபோது, கணவனின் கொடுமை தாங்காமல் தாமே தீ வைத்துக் கொன்ற உண்மையை ஒப்புக்கொண்டார். தினசரி வன்முறை ஒரு குடும்பத்தையே அழித்துள்ளதுடன், எந்தவொரு பிரச்சினைக்கும் கொலை ஒருபோதும் தீர்வாகாது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in