வெடித்தது மோதல்..! இப்போ வந்தவர்களுக்கு பொறுப்பா..? அப்போ நாங்கெல்லாம்.. போர்க்கொடி தூக்கிய சீனியர்கள்… தவெக-வை உலுக்கும் ‘இரட்டை விஜயபாஸ்கர்’ விவகாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெடித்தது மோதல்..! இப்போ வந்தவர்களுக்கு பொறுப்பா..? அப்போ நாங்கெல்லாம்.. போர்க்கொடி தூக்கிய சீனியர்கள்… தவெக-வை உலுக்கும் ‘இரட்டை விஜயபாஸ்கர்’ விவகாரம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் கட்சிப் பதவிகள் வழங்க தவெக தலைவர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த முடிவுக்கு கட்சியின் உள்ளிருந்தே தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கட்சி தாவியவர்களுக்கு உடனடியாக மிக முக்கிய மற்றும் உயரிய பொறுப்புகளை வழங்குவதற்கு தவெகவின் தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆரம்பம் முதல் கட்சிக்காக உழைத்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in