LATEST NEWS
“மக்களின் நம்பிக்கையை இழந்தாரா விஜய்?”.. கோட்டை வட்டாரங்களை அதிர வைத்த உண்மை.. தமிழக அரசியலில் கிளம்பிய புதிய புயல்..!!
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக்கழகம்’ 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் மாற்றமாக இவரது ஆட்சி அமைந்துள்ளது. பதவியேற்ற முதல் நாளிலேயே, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் ஒழிப்புக்கான சிறப்புப் படை, மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை ஆகிய முக்கிய திட்டங்களுக்கான ஆணைகளில் கையெழுத்திட்டுத் தனது மக்கள் நலப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வது போல் உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவெக நிர்வாகிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் இத்தகைய புகார்களில் சிக்குவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, சென்னை திருவொற்றியூரில் தவெக நிர்வாகிகள் ₹50,000 லஞ்சம் கேட்டதாக மூதாட்டி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதேபோல், சேலம் ஓமலூரில் தான் கூறுபவர்களுக்கே 100 நாள் வேலை வழங்க வேண்டும் என தவெக நிர்வாகி ஒருவர் அதிகாரிகளை நிர்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொடர் புகார்கள் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.
