“ஐயோ என் புள்ள கட்டில்ல இருந்து விழுந்து செத்து போச்சே…” கதறி நாடகமாடிய பெற்றோர்… அம்பலமான 11 மாதக் குழந்தை கொலை பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ என் புள்ள கட்டில்ல இருந்து விழுந்து செத்து போச்சே…” கதறி நாடகமாடிய பெற்றோர்… அம்பலமான 11 மாதக் குழந்தை கொலை பயங்கரம்..!!

Published

on

பெங்களூருவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும், தங்களின் குற்றத்தை மறைக்க ஒரு நாடகமாடியுள்ளனர். குழந்தை தற்செயலாக படுக்கையிலிருந்து கீழே விழுந்துதான் உயிரிழந்தது என்று கூறி அனைவரையும் நம்ப வைக்க முயன்றனர்.

Advertisement

இருப்பினும், குழந்தையின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தையின் உடலில் கடுமையான உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

பெற்றோரின் சண்டைக்கு அப்பாவிக் குழந்தை பலியான இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தந்தை ஷெக்கப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in