LATEST NEWS
BREAKING: தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ₹19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ₹22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சம்பள உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. மேலும், ஊழியர்களின் இந்த ஊதிய உயர்வின் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்குக் கூடுதலாக ₹10 வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
