BIG BREAKING: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ.30 லட்சம் லஞ்சம்… சிக்கியது அமைச்சர் பெயரில் பரிந்துரை கடிதம்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ரூ.30 லட்சம் லஞ்சம்… சிக்கியது அமைச்சர் பெயரில் பரிந்துரை கடிதம்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகனுக்கு, அமைச்சர் பெயரில் இந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக தரப்பில் சுமார் ₹30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக அக்கட்சியினரே பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம், தவெக வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் அனைத்தும் தகுதி மற்றும் நேர்மையின் அடிப்படையில் நடக்காமல், அரசியல் பரிந்துரைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் மூலமாகத்தான் நடக்கிறதா என்ற கடுமையான கேள்வியையும், விமர்சனத்தையும் இந்த போலி கடித விவகாரம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in