LATEST NEWS
“பெண்களை போலீஸ் அடிப்பாங்களா?”… கல்யாணத்துக்கு முன் காதலனுடன் சேர்ந்து கொடூர கொலை..காத்திருக்கும் திதிக்கிடும் தகவல்..!!
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கு, சியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி கேத்தனை ஒரு கோட்டையின் உச்சிக்கு சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முன்கூட்டியே திட்டமிட்டபடி, தனது காதலனான சேத்தன் சௌத்ரி என்பவருடன் இணைந்து கேத்தனை ஆழமான பள்ளத்தில் தள்ளி சியா கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கின் விசாரணையில், சியாவின் மொபைல் தேடல் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மேகாலயாவில் கணவரைக் கொன்ற சோனம் ரகுவன்ஷி வழக்கைக் குறித்து சியா இணையத்தில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அந்த வழக்கில் கொலையாளி செய்த தவறுகளைத் தான் செய்துவிடக் கூடாது என்பதில் சியா கவனமாக இருந்துள்ளார். மேலும், பெண் கைதிகளுக்கான சட்ட உரிமைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணை முறைகள் குறித்தும் அவர் தேடியது தெரியவந்துள்ளது. சியாவின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மொபைல் போன் தற்போது தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இக்கொலை வழக்கில் மேலும் பல புதிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
