LATEST NEWS
“ஈரான் தாக்கினால் 20 மடங்கு கடுமையான பதிலடி கொடுப்போம்” அதிபர் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கையால் போர் பதற்றம்..!!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீண்டும் தாக்கினால் 20 மடங்கு கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். ஒருமுறை தாக்குதல் நடத்தினாலும் அமெரிக்கா தீவிரமாகத் திருப்பித்தாக்கும் என எச்சரித்துள்ள அவர், ஈரான் தற்போது முற்றிலும் கட்டுப்பாடின்றிச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக ட்ரம்ப் சாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நிலவி வரும் இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளாலும், கடுமையான எச்சரிக்கைகளாலும் பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது.
