LATEST NEWS
“அரசு வேலை கொடுக்காதீங்க.. நிறுத்தி வையுங்க!”…விஜய்க்கு எதிராக கிளம்பிய புதிய செக்.. சண்முகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!!
கடந்த வருடம் கரூர் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ வசம் இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மீண்டும் கரூருக்குச் செல்லவிருக்கிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அவர் அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்க உள்ளார். அரசின் இந்த முடிவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக, தவெக ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தவெக நடத்திய பிரச்சாரத்தின் போது உயிரிழந்தவர்கள் என்பதால், தவெக அரசு தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இப்படியான அறிவிப்புகள் வழக்கின் தன்மையையே நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சி பொறுப்பேற்றுத் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவது வேறு, அரசு வேலை வழங்குவது முற்றிலும் வேறானது என்பதால், இது போன்ற சம்பவங்களில் அரசு வேலை வழங்க முறையான பொது வழிகாட்டுதலை (Guidelines) உருவாக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
