நாளை இரவு என்ன நடக்கும்?ராணுவம் குவிப்பு.. விமானங்கள் ரத்து! 3 நாடுகளை ஒரே நேரத்தில் ஸ்தம்பிக்க வைத்த ‘காட்ஜில்லா’ புயல்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாளை இரவு என்ன நடக்கும்?ராணுவம் குவிப்பு.. விமானங்கள் ரத்து! 3 நாடுகளை ஒரே நேரத்தில் ஸ்தம்பிக்க வைத்த ‘காட்ஜில்லா’ புயல்..!

Published

on

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘பாவி’ என்ற அதிதீவிர சூப்பர் புயல், பிரான்ஸ் நாட்டை விடப் பெரிய பரப்பளவான சுமார் 9.4 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு விரிந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் இந்த பிரம்மாண்ட புயல், நாளை இரவு தைவானை கடந்து சீனாவின் புஜியான் மற்றும் ஜெஜியாங் மாகாணங்களுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இப்புயலின் கோரத் தாக்கத்தை எதிர்கொள்ள ஆசிய நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தைவானில் வரலாறு காணாத மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அங்கு பங்குச்சந்தைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு, மீட்புப் பணிகளுக்காக 29,000 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சீனாவிலும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு, பெய்ஜிங்கில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தைவான், ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in