“3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… அபராதம் விதித்து மட்டன் விருந்து சாப்பிட்ட கிராமத்தினர்.. இறுதியில் போலீசார் செய்த ‘அந்த’ காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… அபராதம் விதித்து மட்டன் விருந்து சாப்பிட்ட கிராமத்தினர்.. இறுதியில் போலீசார் செய்த ‘அந்த’ காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்திற்கு உட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், அங்குள்ள 3 வயது பெண் குழந்தையைத் தனியாக ஓர் அறைக்குக் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த தாய், தன் மகள் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்த விபரீத சம்பவம் குறித்து சட்டப்படியாகக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல், மறுநாளே ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி இந்த விவகாரத்தை மூடிமறைக்கச் சில தரப்பினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவன் உடனடியாகத் தந்த 20,000 ரூபாயை வைத்துச் சில பஞ்சாயத்து உறுப்பினர்கள் கிராமத்தில் மது மற்றும் மட்டன் சமைத்து பெரிய விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீசார், கிராமத்தில் விருந்து நடந்து கொண்டிருந்தபோதே அங்கு விரைந்து சென்று குற்றவாளி சுனில் லோஹ்ராவைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனப் பஞ்சாயத்துத் தலைவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் பேசிய கும்லா மாவட்ட எஸ்பி ஹரிஸ் ஜமான், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அவர்கள் உண்மையை மறைக்க முயன்றது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in