“ஈரானுக்குப் பெருத்த அடி” ஹார்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்காவே இனி பாதுகாவலன் – அதிபர் டிரம்ப் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஈரானுக்குப் பெருத்த அடி” ஹார்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்காவே இனி பாதுகாவலன் – அதிபர் டிரம்ப் அதிரடி..!!

Published

on

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட 60 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம், பரஸ்பர தாக்குதல்களால் முறிந்ததைத் தொடர்ந்து இந்த விபரீத சூழல் உருவாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கும் உரிமை தனக்கே இருப்பதாக ஈரான் வாதிட்டு வந்த நிலையில், டிரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தனது ‘டிரூத்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இனிவரும் காலங்களில் அமெரிக்கா ‘ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன்’ என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், உலகிலேயே மிகவும் பதற்றமான இந்த கடல் வழிப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கும் பணிக்கான செலவை ஈடுசெய்யும் வகையில், இதன் வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்துச் சரக்குகள் மீதும் 20 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான கப்பல்கள் அல்லது அதன் வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மீண்டும் முழுமையாக முற்றுகை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஈரானைத் தவிர மற்ற உலக நாடுகள் அனைத்தும் இந்த ஜலசந்தியை நியாயமான முறையில் எவ்விதத் தடையுமின்றிப் பயன்படுத்தலாம் என டிரம்ப் உறுதியளித்துள்ளார். டிரம்பின் இந்த 20% கட்டண அறிவிப்பு குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காததால், இப்பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மேலும் சிக்கலாகிப் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in