BREAKING: அமைச்சர் செங்கோட்டையனுக்கு பேரதிர்ச்சி… உயர்நீதிமன்றம் அனுப்பிய திடீர் நோட்டீஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அமைச்சர் செங்கோட்டையனுக்கு பேரதிர்ச்சி… உயர்நீதிமன்றம் அனுப்பிய திடீர் நோட்டீஸ்..!!

Published

on

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு, செங்கோட்டையனின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி இந்தத் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இது குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு தவெக அமைச்சர் செங்கோட்டையனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in