“3 கோடி கொடுங்க.. மந்திரி ஆக்குறேன்!”.. பெண் MLA-வுக்கு வந்த ரகசிய கால்.. கேரளா அரசியலில் திடீர் பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“3 கோடி கொடுங்க.. மந்திரி ஆக்குறேன்!”.. பெண் MLA-வுக்கு வந்த ரகசிய கால்.. கேரளா அரசியலில் திடீர் பூகம்பம்..!!

Published

on

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன் பெயர் ராஜ்குமார் என்றும், தான் பிரியங்கா காந்தியின் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணைப் பெற்றதாகக் கூறி வித்யா பாலகிருஷ்ணனை அவர் நம்ப வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர், விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கவிருப்பதாகவும், தனக்கு ரூ.3 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகவும் பேரம் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சட்டமன்ற உறுப்பினர், உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவம் உண்மையான அரசியல் பேரமா அல்லது அமைச்சர் பதவி ஆசை காட்டிப் பணம் பறிக்க முயன்ற மோசடியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in