என்னடா இது.? அரெஸ்ட் டூ அணைப்பு..! பாடகர் அறிவின் தோளில் கைபோட்டு வழியனுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. நடந்தது என்ன.? சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னடா இது.? அரெஸ்ட் டூ அணைப்பு..! பாடகர் அறிவின் தோளில் கைபோட்டு வழியனுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. நடந்தது என்ன.? சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..!

Published

on

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமைச் செயலகம் முன்பு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக ஜென்-இசட் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாகவும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் பாடகர் அறிவு இந்தத் தனிநபர் போராட்டத்தில் இறங்கினார். தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்ற அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

பாடகர் அறிவின் இந்த கைதைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக என் அன்புச் சகோதரர் அறிவுவைக் கைது செய்த தவெக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; நீட் தேர்வுக்கு எதிராக எழும் குரல்களைக் கேட்க வேண்டுமே தவிர, அடக்கக் கூடாது” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நீட் தேர்வு என்பது ஒரு பெரிய மோசடியாக மாறிவிட்டதாகவும், அதற்கு எதிராகப் போராடும் இளைஞர்களை ஒடுக்குவது கவலையளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

இந்தக் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கைது செய்யப்பட்ட ராப் பாடகர் அறிவு, விடுக்கப்பட்ட பின்னர் நேரடியாகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தவெக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பாடகர் அறிவின் தோள் மீது கைபோட்டுத் தனது காரிலேயே அவரைப் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தார். முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக்காமல் பாடகர் அறிவு காரில் புறப்பட்டுச் சென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in