என்னப்பா இப்படி அழுகுறாரு?!.. ஜனநாயகன் FDFS-ல் கதறி அழுது ஆர்ப்பரித்த அமைச்சர் பர்வேஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CINEMA

என்னப்பா இப்படி அழுகுறாரு?!.. ஜனநாயகன் FDFS-ல் கதறி அழுது ஆர்ப்பரித்த அமைச்சர் பர்வேஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தைப் பார்த்த தவெக நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது சக நண்பர்கள் மற்றும் கட்சியினருடன் இணைந்து முதல் நாள் முதல் காட்சியை அவர் கண்டுகளித்தார். அப்போது, திரையில் விஜய்யை இனி நடிகராகக் காண முடியாது என்ற எண்ணமும், அவரது கடைசிப் படம் இதுதான் என்ற ஏக்கம் மேலிடவே அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

திரையரங்கில் அவர் அழுதுகொண்டிருந்த போது, அருகிலிருந்த அவரது நண்பர்களும் கட்சியினரும் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றும் காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. அரசியலில் முழுநேரமாக ஈடுபடப்போவதால் சினிமாவுக்கு விடை கொடுத்துள்ள விஜய்யின் இந்த கடைசித் திரைப்படம், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சான்றாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in