LATEST NEWS
திமுகவுடன் ரகசிய பேரம்..? பாஜகவின் பின்புலம்.. தவெகவின் தயவு… அத்தனைக்கும் மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்.. பற்றி எரியும் அதிமுக வட்டாரம்…!!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுக வைத்திருந்த முக்கிய திட்டங்கள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்தும், ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட வியூகங்கள் குறித்தும் எழுந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது இந்தக் கருத்துகள் அமைந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பதே தங்களின் முதன்மை இலக்காக இருந்தது என்று டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார். இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவைப் பெறத் திட்டமிட்டிருந்ததாகவும், தவெகவின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதே தங்களின் பிரதான திட்டமாக இருந்தது என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், எதிர்த்தரப்பான திமுகவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்பதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இந்த அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் பாஜக செயல்படவில்லை என்றும், தங்களின் முடிவுகள் அனைத்தும் எந்தவொரு மறைமுக அழுத்தமுமின்றி எடுக்கப்பட்டவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
