“இனிமே இப்படி பண்ணுவியா..? பேண்ட்டில் சிறுநீர் கழித்த சிறுவனை… ரகசிய உறுப்பில் சூடு வைத்து கொடூரம் காட்டிய டீச்சர்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமே இப்படி பண்ணுவியா..? பேண்ட்டில் சிறுநீர் கழித்த சிறுவனை… ரகசிய உறுப்பில் சூடு வைத்து கொடூரம் காட்டிய டீச்சர்..!!”

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாண்டேபூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில், நர்சரி வகுப்பில் படித்து வந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது கழிப்பறைக்குச் செல்ல தனது ஆசிரியை பிரீதி குஷ்வாஹாவிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் ஆசிரியை அனுமதி மறுத்ததால், வேறு வழியின்றி சிறுவன் தனது ஆடைகளிலேயே சிறுநீர் கழித்துவிட்டான்.

இதனால் கடுமையான கோபமடைந்த ஆசிரியை, அச்சிறுவனைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று கத்தியைத் தீயில் சுடவைத்து, அவனது ரகசியப் பகுதியில் சுடுவைத்துக் காயப்படுத்தியுள்ளார். அத்துடன் நிற்காமல் அச்சிறுவனை அடித்து உதைத்து, மீண்டும் இதுபோன்று நடக்கக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளார்.

Advertisement

வீட்டிற்குச் சென்ற சிறுவன் நடந்த கொடூரத்தைச் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினர், ஆசிரியை பிரீதி குஷ்வாஹா, பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர் ஆகிய மூவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in