LATEST NEWS
“இனி பர்த் & டெத் சர்டிஃபிகேட் வாங்குறது அவ்ளோ ஈஸி இல்ல”.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ்.. மக்களவையில் நிறைவேறிய புதிய அதிரடி மசோதா..!!
நாடாளுமன்ற மக்களவையில் ‘பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா’ குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைக் குறித்த நேரத்திற்குள் பதிவு செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புதிய திருத்தத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை உடனடியாகப் பதிவு செய்யாமல், ஒரு ஆண்டைக் கடந்தோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்டோ பதிவு செய்ய முற்பட்டால், மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாமல் இரண்டு ஆண்டுகளைக் கடந்து தாமதமாகிவிட்டால், முதல்நிலை நீதித்துறை நடுவரின் முறையான உத்தரவைப் பெற்ற பிறகே பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்ய முடியும் என இந்த மசோதாவில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
