LATEST NEWS
அட கடவுளே..! தண்ணீர் கூட இல்லாமல் 15 நாட்கள்.. 17 பேருக்கு நேர்ந்த சோகம்.. நடுக்கடலில் நடந்து என்ன..? ஸ்பெயின் கடலில் நடந்த கோரச் சம்பவம்..!!
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு 19 அகதிகளுடன் சென்ற படகு இன்ஜின் பழுதாகி நடுவழியில் சிக்கியது. 15 நாட்களாக உணவும் தண்ணீருமின்றி கடலில் தத்தளித்ததில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மல்லோர்கா தீவுக்குத் தென்மேற்கே தீவிர நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது. அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், இபிஸா தீவுக்கு அருகே 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த படகு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாகச் சான்றளிக்கும் அதேவேளையில், ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. மொராக்கோவில் இருந்து எல்லை கடக்க முயன்றதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ள நிலையில், மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
