LATEST NEWS
“யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..” உதயநிதி இமேஜ் எகிறியதால் அறிவாலயத்தில் தடாலடி மாற்றம்.. ஸ்டாலின் போட்ட மாஸ் பிளான்.. அதிரும் அரசியல் களம்..!!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிமட்டம் முதல் தலைமை வரை மறுசீரமைக்கும் பணியில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புச் சீரமைப்புக் குழு, தனது அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது மற்றும் ஒரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சாத்தியமான இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் சூழலில், இப்போது பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்தால் கட்சிக்குள் அதிருப்தி உருவாகலாம் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். இதனால், இந்த மறுசீரமைப்பு தொடர்பான இறுதி முடிவுகள் ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு மேலும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
குறிப்பாக, காவிரி உரிமைப் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தஞ்சாவூரில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வுக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகப் பேசப்படும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், கட்சி நிர்வாக மாற்றங்கள் குறித்து திமுக சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
