LATEST NEWS
“டெல்லி மழை வெள்ளத்துல இப்படி ஒரு ‘ஜாலி ரைடு’… டாக்ஸ் கட்டுறது இதுக்குத்தானா பாஸ்..?” அரசாங்கத்தை அசிங்கப்படுத்திய அண்ணனின் வேற லெவல் சம்பவம்..!!
டெல்லியில் பெய்த கனமழைக்குப் பிறகு வீதிகளில் வெள்ளநீர் தேங்குவது வழக்கமான ஒன்று என்றாலும், தெற்கு டெல்லியின் பிரீமியம் மற்றும் ‘பாஷ்’ பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழைநீரால் நிரம்பி வழிந்த சாலையில் ஒருவர் படகு ஓட்டுவது போல ரப்பர் ராஃப்ட்டில் மிதந்து செல்லும் இந்த வீடியோ, காண்போரைக் சிரிக்க வைப்பதுடன் அப்பகுதியின் வடிகால் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கவும் வைத்துள்ளது.
ஸ்ரீ கண்டேல்வால் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், கிரேட்டர் கைலாஷ் பகுதி சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதன் நடுவே ஒரு நபர் கையில் துடுப்புடன் சிறிய ராஃப்ட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு வசதியாகச் செல்கிறார். அருகில் உள்ள மக்கள் தங்களின் ஜீன்ஸ் பேண்ட்டை மேலே சுருட்டிவிட்டு, முழங்கால் நீரில் இறங்கி அந்த ராஃப்ட்டை முன்னோக்கித் தள்ளி உதவி செய்கின்றனர்.
https://www.instagram.com/reel/DbwHlhsz3bs/?utm_source=ig_web_button_share_sheet
இப்பகுதியின் மோசமான வடிகால் வசதியை விமர்சித்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. “மக்கள் இவ்வளவு அதிக வரிகளைச் செலுத்தியும், சிறிது மழைக்கே சாலைகள் படகுப் பாதையாக மாறுவது ஏன்?” என்று அந்தப் பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் டெல்லி மாநகராட்சியின் பராமரிப்புக் குறைபாடுகளை விமர்சித்தும், இன்னும் சிலர் இதை ஒரு வேடிக்கையான நிகழ்வாக எடுத்துக்கொண்டும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
