LATEST NEWS
“எம்.ஆர்.வி-க்கு ஜாக்பாட்… சி.வி-க்கு அல்வா..?!” தவெக நியமனத்தால் வெடித்த உட்கட்சிப் பூசல்… ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் எனப் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து மூத்த அரசியல் தலைவராக உலா வந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். எனினும், அவரது நீண்டகால அரசியல் அனுபவத்திற்கு ஏற்ப மாநில அளவில் முக்கியப் பொறுப்புகள் வழக்கம் போல வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித அதிகாரமும் இல்லாத மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி மட்டுமே அவருக்குக் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் செல்வாக்குமிக்க ஒரு மூத்த தலைவரை வெறும் மாவட்ட நிர்வாகியோடு முடக்கி வைத்திருப்பதாகக் கூறி, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் வெடித்துள்ளதோடு, தவெகவின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் புதிய சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அதே வேளையில், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கு மாநில அளவில் ‘துணைப் பொதுச்செயலாளர்’ போன்ற உயரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத ஒப்பிட்டுப் பார்க்கும் சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அனுபவமும் செல்வாக்கும் கொண்ட இவருக்கும் மாநில அளவிலான பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தங்களது மனக்குறையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
