LATEST NEWS
“இதற்காக மட்டும் தான் ஆதரவு கொடுத்தோம்… இனி தவெகவுக்கு ஆதரவு வாபஸ்..!” சஸ்பென்ஸை உடைத்த எஸ்.பி. வேலுமணி… அதிரும் தமிழக அரசியல்..!!!
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், அந்த ஆதரவு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிமுக மூத்த தலைவர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்து பல்வேறு தவறுகளைச் செய்து வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமனின் பேச்சை மட்டுமே நம்பி, தங்களை ‘துரோகிகள்’ என்று கட்சியின் நிர்வாகிகள் சிலர் விமர்சிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் எஸ்பி வேலுமணி கொந்தளிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் நாளை அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள சூழலில், எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்திருப்பது மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் மீதான பகிரங்கக் குற்றச்சாட்டுகள் ஆகியவை அதிமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் புதிய பிளவுகளையும் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளன.
