LATEST NEWS
“ஒரு விளையாட்டுக்காக என் மதத்தை விட்டுக்கொடுக்க முடியாது” துளசி மாலையைக் கழற்ற மறுத்து கெத்து காட்டிய 12 வயது இந்தியச் சிறுவன் ஷுப் படேல்… அதிர்ந்துபோன ஆஸ்திரேலியா…!!
“விளையாட்டை வேண்டுமானால் கைவிடுவேன், என் மதத்தை அல்ல!” என்ற 12 வயது இந்திய வம்சாவளிச் சிறுவனின் துணிச்சலான வார்த்தைகள் தற்போது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷுப் படேல் என்ற சிறுவன் அணிந்திருந்த புனிதமான துளசி மாலையைக் கழற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆனால், தனது சமய நம்பிக்கையில் உறுதியாக இருந்த ஷுப் படேல், அந்த மாலையைக் கழற்ற மறுத்துவிட்டார். “ஒரு கால்பந்து போட்டிக்காக என்னுடைய மதக் கோட்பாடுகளை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது; தேவைப்பட்டால் விளையாட்டையே கைவிடுவேனே தவிர, என் மதத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். சிறு வயது முதலே இந்தத் துளசி மாலையை அணிந்து வருவதாகவும், அதைக் கழற்றுவது தனது மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
விளையாட்டை விட மதம் மேலானது, சாதாரண நம்பிக்கையை விட ஆழ்ந்த பக்தி உயரியது என்பதைச் சிறுவன் ஷுப் படேல் தனது செயலால் நிரூபித்துள்ளார். போட்டியை விடத் தன் அடையாளத்திற்கும் சமய நம்பிக்கைக்கும் முதலிடம் கொடுத்த இந்த 12 வயதுச் சிறுவனின் விடாமுயற்சியும், உறுதியான நிலைப்ப்பாடும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
