“ஸ்கூலுக்கு போன பிள்ள வீடு திரும்பல” தண்டவாளத்தில் கிடந்த பள்ளி சீருடை… பாட்னாவில் நடந்த த்ரில்லர் நாடகம்… இன்ஸ்டாகிராம் காதலால் அரங்கேறிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஸ்கூலுக்கு போன பிள்ள வீடு திரும்பல” தண்டவாளத்தில் கிடந்த பள்ளி சீருடை… பாட்னாவில் நடந்த த்ரில்லர் நாடகம்… இன்ஸ்டாகிராம் காதலால் அரங்கேறிய பயங்கரம்..!!

Published

on

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளைஞரின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு மாணவியை, பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் 36 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த ககவுல் பகுதியைச் சேர்ந்த அம்மாணவி, ஆகஸ்ட் 10 அன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. காவல்துறையினரின் தீவிரத் தேடுதலின்போது, அசான்சோலைச் சேர்ந்த விஷால் குமார் என்ற இளைஞர் மாணவியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. காவல்துறையினர் துரத்தியதை அடுத்து, அந்த இளைஞர் மாணவியை ரயில் நிலையத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

முன்னதாக, மாணவியைக் காணாமல் தேடிவந்த குடும்பத்தினருக்கு, தானாப்பூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே அவரது பள்ளிச் சீருடையும் பையும் கண்டெடுக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்தே, தானாப்பூர் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணைப் படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

Advertisement

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காணாமல்போன மாணவி விஷால் குமாருடன் இன்ஸ்டாகிராம் வழியே தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது மாணவி பத்திரமாக மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தண்டவாளத்தில் சீருடையைப் பார்த்து கொந்தளித்துச் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in