பூட்டிய டாய்லெட்டில் மயங்கிக் கிடந்த நர்ஸ்.. கையில் சிரஞ்சீ… அடுத்தடுத்து கிடந்த மருந்துகள்.. நடந்தது என்ன..? திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பூட்டிய டாய்லெட்டில் மயங்கிக் கிடந்த நர்ஸ்.. கையில் சிரஞ்சீ… அடுத்தடுத்து கிடந்த மருந்துகள்.. நடந்தது என்ன..? திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அரசு நில ரத்தன் சர்க்கார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவின் உயர் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயதான ரூபாலி பர்மன் என்ற செவிலியர், புதன்கிழமை இரவு பணி நேரத்தில் காணாமல் போனார். இரவு சுமார் 9.40 மணியளவில் காணாமல் போன அவரைத் தேடிய மருத்துவமனை ஊழியர்கள், நீண்ட நேரமாகக் பூட்டப்பட்டிருந்த கழிப்பறைக் கதவை உடைத்துப் பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

சம்பவ இடத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர், காலி மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசி ஆகியவற்றைக் கைப்பற்றினர். எனினும், தற்கொலைக்கான கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இந்த உயிரிழப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவரது செல்போனைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கடந்த மார்ச் மாதம் திருமணமான ரூபாலி பர்மன், கொல்கத்தா அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்திலும், கணவரின் குடும்பத்தினர் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த மருத்துவமனையில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in