LATEST NEWS
“ஊமையா உட்கார நாங்க வரல… எங்களுக்கும் பேச தெரியும்..!” அமைச்சர் நிர்மல் குமாரை விரட்டி விரட்டி வெளுத்த செந்தில் பாலாஜி.. அதிர்ந்த சட்டசபை..!!
தமிழக சட்டமன்றத்தில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்தது. மின்சார வாரியக் கடன் மற்றும் டெண்டர் முறேகடுகள் குறித்து செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், பொதுவெளியிலும் அவையிலும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சரின் இத்தகைய கடுமையான விமர்சனங்கள் அவையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
”பேசாம ஊமையா இருந்துட்டு போறதுக்கு நாங்க சபைக்கு வரல, எங்களுக்கும் பதிலுக்கு பதில் பேச தெரியும்”..
அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன வார்த்தையால் கோவத்தின் உச்சிக்கே சென்ற செந்தில் பாலாஜி#TNAssembly | #TNCMVijay | #UdhayanidhiStalin | #JCDPrabhakar | #DMK | #ADMK | #TVK | #PMK |… pic.twitter.com/oxwnbJM3Av— Polimer News (@polimernews) August 21, 2026
அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, “நாங்கள் சட்டமன்றத்திற்குப் பேசாமல் ஊமைகளைப் போல உட்கார்ந்திருக்க வரவில்லை. ஒரு வார்த்தை பேசினால் மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும்” என்று ஆவேசமாக முழங்கினார். மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லும் இடமாகவே சட்டமன்றம் இருக்கிறது என்றும், பொதுவெளியில் தடித்த வார்த்தைகளைப் பேசி ஒரு தோற்றத்தை உருவாக்குவதை விடுத்து, தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இரு தரப்பு எல்.எம்.ஏ-க்களும் மாறி மாறி எழுந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது
