ஐயா என்னை சீக்கிரம் பேச விடுங்க.. இல்லனா என்ன நடக்கும் தெரியுமா…? எ.வ வேலு கொடுத்த சைகை… முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயா என்னை சீக்கிரம் பேச விடுங்க.. இல்லனா என்ன நடக்கும் தெரியுமா…? எ.வ வேலு கொடுத்த சைகை… முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்சன்..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் எதிர்க்கட்சிகளின் குரல் குறித்தும் அவையின் நேரலை ஒளிபரப்பு குறித்தும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அதற்குப் பதிலளிக்க தங்களுக்குப் போதிய பேசும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு அனுமதி அளித்தால்தான் நேரலை ஒளிபரப்பில் தங்களது விளக்கங்கள் சரியாகப் பொதுமக்களுக்குச் சென்றடையும் என்று அவர் குறிப்பிட்டார். அவ்வாறு இல்லையெனில், தங்களது பதில்கள் முழுமையாக வராமல் ‘ரீல் ரீல்’ என கட் ஆகி மேலே போய் விடுகிறது என்று எ.வ.வேலு அவர்கள் மிகவும் நகைச்சுவையாகத் தனது கைகளால் சைகை செய்து விவரித்தார்.

Advertisement

https://media.getlokalapp.com/videos-bucket//lokalapp-prd-1312163145/videos/17167323/17167323_aHOFH0KpOEybCRmp_transcode_1227805.mp4

அவையின் இந்த கலகலப்பான சூழலை அங்கிருந்த முதலமைச்சர் அவர்கள் மிகுந்த சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்தார். எ.வ.வேலுவின் இந்த சுவாரசியமான சைகை மற்றும் பேச்சின் காரணமாக, அதுவரை பேரவையில் நிலவி வந்த காரசாரமான மற்றும் பதற்றமான சூழல் முற்றிலும் தணிந்து, சிறிது நேரம் அவையே கலகலப்பாக மாறியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in