BREAKING: பிரபல பாடகர் சுட்டுக் கொலை… 5 குண்டுகள் பாய்ந்தது.. கண்ணீரில் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

BREAKING: பிரபல பாடகர் சுட்டுக் கொலை… 5 குண்டுகள் பாய்ந்தது.. கண்ணீரில் ரசிகர்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பிரபல ஹரியான்வி பாடகரும், யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.பி. குப்தா காலனி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுவிட்டு வெளியே வந்த அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் குறிவைத்துச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடகர் மற்றும் யூடியூபராகப் பல லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அங்கித் பால்யனின் திடீர் மறைவு இசை உலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அவர் முன்பு பாடியிருந்த ஒரு பாடலின் வரிகளைப் போன்றே அவரது மரணமும் நிகழ்ந்திருப்பது அனைவரையும் மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in