LATEST NEWS
“பரந்தூர்ல எனக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்ல” 900 ஏக்கர் இருக்குன்னு இப்படி பொய் சொல்லுறாங்களே… ‘ஜி ஸ்கொயர்’ அதிபர் பால ராமஜெயம் திட்டவட்டமாக மறுப்பு..!!
ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம், பரந்தூர் பகுதியில் தங்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பரந்தூரில் தங்கள் நிறுவனத்திற்கு 900 ஏக்கர் நிலம் இருப்பதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், தமக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அப்பகுதியில் எந்த நிலமும் சொந்தமாக இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் சட்டப்பேரவையில் தங்கள் நிறுவனம் குறித்து ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு உரிய ஆதாரம் கேட்டுச் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சபரீசனுக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர் தனது விளக்கத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக பரந்தூர் கிராமத்திற்குள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மனைப் திட்டங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், பரந்தூர் விமான நிலையப் பகுதியை முன்னிறுத்தி, அதிலிருந்து சுமார் 20 முதல் 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் பல முக்கிய வீட்டு மனை திட்டங்களை அந்நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
