“அவங்களுக்கு என்னாச்சுன்னே தெரியல..?!” கண் இமைக்கும் நேரத்தில் மறைந்த இரு பேருந்துகள்.. நேபாள எல்லையில் நடந்த அந்த கொடூர விபரீதம்… நெஞ்சை உருக்கும் குடும்பத்தினரின் கண்ணீர் பேட்டி..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“அவங்களுக்கு என்னாச்சுன்னே தெரியல..?!” கண் இமைக்கும் நேரத்தில் மறைந்த இரு பேருந்துகள்.. நேபாள எல்லையில் நடந்த அந்த கொடூர விபரீதம்… நெஞ்சை உருக்கும் குடும்பத்தினரின் கண்ணீர் பேட்டி..!!

Published

on

நேபாளத்திற்குச் சுற்றுலா சென்று நிலச்சரிவுப் பேரழிவில் சிக்கிய மூன்று பேருந்துகளில், நடுவில் பயணித்த பேருந்தின் பயணிகள் மட்டுமே நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், அதற்கு முன்னும் பின்னும் சென்ற இரு பேருந்துகளுக்கு என்ன ஆனது என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, நேபாளம் சென்ற தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தற்போதைய நிலை குறித்து துல்லியமான தகவல்களை வழங்கக் கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் அவசர மனு அளித்துள்ளனர். தங்கள் அன்பிற்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்த அரசு உடனடியாக நேபாள தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://twitter.com/polimernews/status/2093309650435543174/video/1

Advertisement

இந்த நெஞ்சை உலுக்கும் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க அளித்த பேட்டி , தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த தேசத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் தங்களது கண் முன்னாலேயே முன்னால் சென்ற பேருந்தும், பின்னால் வந்த பேருந்தும் நிலச்சரிவில் சிக்கி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாக உறவினர்கள் குமுறுகின்றனர். இந்த விபரீத இயற்கைச் சீற்றத்தில் மாயமானவர்களை மீட்கவும், மீட்புப் பணிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in