LATEST NEWS
அடேங்கப்பா… 200 வருஷத்துல முதல்முறை பொறந்த பெண் குழந்தை..! குதிரை ரதம், மேள தாளம்னு ஊரே வியந்து பாக்குற அளவுக்கு ராஜ வரவேற்பு..! இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் பீடு பகுதியைச் சேர்ந்த தஹிஃபலே குடும்பத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பதைக்கூடச் சில இடங்களில் கவலையோடு பார்க்கும் சூழலில், இக்குடும்பத்தினர் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை தெய்வீகக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்வை ஏதோ ஒரு அம்மன் கோவில் திருவிழா போல மிகவும் கோலாகலமாக அவர்கள் நடத்தியுள்ளனர்.
அக்குடும்பத்தினர் தங்களின் வீட்டிற்கு வந்துள்ள பெண் குழந்தைக்கு அன்புடனே ‘கார்கி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையையும் அவளது தாயாரையும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அமரவைத்து, ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் மேள தாளங்கள் முழங்க, மின்விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் ஆடல் பாடலுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் மட்டுமன்றி, அந்த ஊர் மக்களும் கலந்துகொண்டு தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
https://www.instagram.com/reel/Dcu0ZURCVrs/?utm_source=ig_web_button_share_sheet
இந்தக் குடும்பத்தில் கடந்த 4 தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்ததாகவும், பெண் குழந்தையே பிறக்கவில்லை என்றும் குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிஃபலே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள முதல் பெண் குழந்தையை வீட்டின் ‘லட்சுமி’யாகக் கருதி, இந்த பிரம்மாண்டமான வரவேற்பை அளித்துள்ளதாகக் குடும்பத்தினர் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். சமுதாயத்தில் பெண் குழந்தைகள் குறித்த நேர்மறை எண்ணத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இச்சம்பவம் அமைந்து அமைந்திருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
