LATEST NEWS
“இன்னும் பாக்கி ரூ.2000.. வாயைத் திறந்தா மாட்டிப்போம்..” விசித்திர முறையில் லஞ்சம் கேட்ட BDO… ரகசிய கேமராவில் சிக்கிய 20 வினாடி பகீர் வீடியோ!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கான்ட்ராக்டரிடம் பில் தொகைக்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் என்பவரை மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர், தனக்கு வரவேண்டிய பில் தொகையை விடுவிப்பதற்காக பி.டி.ஓ சித்தார்த்தனை அணுகியபோது, அவர் ரூ.6,500 லஞ்சம் கேட்டுள்ளார். ஒப்பந்ததாரர் முதற்கட்டமாக ரூ.4,500 கொடுத்துள்ள நிலையில், மீதமுள்ள லஞ்சத் தொகை பாக்கியான ரூ.2,000-ஐ உடனடியாக வழங்குமாறு அதிகாரி சித்தார்த்தன் தனது கைப்பட பேப்பரில் எழுதி கறாராகக் காட்டியுள்ளார்.
https://twitter.com/polimernews/status/2095517770717044841/video/1
அதிகாரியின் இந்த அசாத்திய தந்திரமான லஞ்ச லீலையை அந்த ஒப்பந்ததாரர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, அந்த 20 வினாடி காகித லஞ்சக் காணொளி அசுர வேகத்தில் காட்டுத்தீயாகப் பரவி மக்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் வைரலான இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரி, லஞ்சப் பேய் பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தனை பணியிடை நீக்கம்செய்து இன்று மரண ஆப்பு அடித்துள்ளார். அரசு நிர்வாகத்தையே அசைத்துப் போட்டுள்ள இந்த லஞ்ச ஒழிப்பு அதிரடி நடவடிக்கை தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது.
