LATEST NEWS
“என்னது.. இன்னும் கொஞ்ச வருசத்துல நம்மள கொன்றுமா..?” AI லேப்பில் உருவாகும் கொடூர எமன்..! அலறி அடித்து ஓடிய ஆய்வாளர் வெளியிட்ட பகீர் தகவல்..!!
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் சக்திவாய்ந்த “சூப்பர் AI”, அடுத்த சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்துவிடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார். இந்த கொடூரமான ஆபத்து குறித்த அச்சம் மற்றும் பயத்தின் காரணமாகவே தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தனது X தளப் பதிவில் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
OpenAI மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய முன்னணி AI நிறுவனங்கள் எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மனிதர்களின் உயிருடன் விளையாடும் வகையில், போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி சூப்பர் AI-ஐ மேம்படுத்தும் பணிகளில் இந்த நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்றும், இது மனிதர்களின் வாழ்விற்கே பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்றும் அவர் தனது பதிவில் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
