“அடப்பாவமே.. ரூ.500 நோட்டுக்கு ஆசைப்பட்டு நேர்ந்த கொடூரம்..” மரணக் கிணற்றுக்குள் பைக் உடன் விழுந்து நிலைகுலைந்த சுமன் ரைடர்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. ரூ.500 நோட்டுக்கு ஆசைப்பட்டு நேர்ந்த கொடூரம்..” மரணக் கிணற்றுக்குள் பைக் உடன் விழுந்து நிலைகுலைந்த சுமன் ரைடர்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

மரணக் கிணறு சாகச வீராங்கனையான சுமன் ரைடர், திருவிழா ஒன்றில் பைக்கில் அதிவேகமாகச் சுற்றி வந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபரீத விபத்து நேர்ந்துள்ளது. அப்போது மேலே இருந்து ஒரு சிறுவன் காட்டிய ரூ.500 நோட்டைப் பைக்கில் வேகமாகச் சுழன்றபடியே வாங்குவதற்கு அவர் முயன்றுள்ளார். எதிர்பாராதவிதமாக, மிக உயரத்திற்குச் சென்றபோது பைக்கின் சமநிலையை இழந்த சுமன் ரைடர், தனது வாகனத்தோடு அப்படியே மரணக் கிணற்றின் அடிப் பகுதிக்குள் தூக்கி வீசப்பட்டு நிலைகுலைந்து விழுந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் கோர விபத்தில், அவரது இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.

https://twitter.com/Rudhrayadav001/status/2097853087625118146?s=20

விபத்திற்குப் பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமன் ரைடர் தனது ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்போது கொஞ்சம் நலமாக இருக்கிறேன் என்பதை வீடியோ மூலம் உங்களுக்குச் சொல்லாவிட்டால், நீங்கள் அனைவரும் கதறி அழுது கொண்டிருப்பீர்கள். அதனால்தான் நானே நேரில் வந்து உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், தனது தற்போதைய நிலைக் கண்டு ரசிகர்கள் யாரும் அழ வேண்டாம் என்றும், மிக விரைவில் குணமாகித் திரும்பி வந்து, அதே பழைய அசுர வேகத்தில் மீண்டும் பைக்கில் சாகசம் செய்வேன் என்றும் நெகிழ்ச்சியோடு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in