LATEST NEWS
“அடேய் என்னடா இப்படி பண்ணிட்டீங்க..” பார்க்கிங்கில் நின்ற காரில் மர்ம நபர்கள் செய்த காரியத்தை பாருங்க.. அமெரிக்காவில் பஞ்சாப் பெண்ணுக்கு நேர்ந்த விசித்திரக் கொடுமை..!!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் 8 அன்று காலை, அவர் வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காகத் தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் நின்றிருந்த தனது காரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் யாரோ நள்ளிரவில் அவரது காரின் நான்கு டயர்களையும் முழுமையாகத் திருடிச் சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி, அந்தத் திருடர்கள் காரின் முன்பகுதியில் ஒரு துண்டு அறிவிப்பு ஒன்றையும் ஒட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா போன்ற மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஒரு வளர்ந்த நாட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தத்திலேயே காரின் 4 டயர்களும் திருடப்பட்டிருப்பது தனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்தப் பெண் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்குள்ள வாகன நிறுத்தப் பராமரிப்பு அதிகாரிகளிடம் அவர் உடனடியாகப் புகார் அளித்தும், அவர்கள் தரப்பில் இதுவரை எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு குறைபாட்டால் மற்ற குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற இழப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எவ்வகையிலும் நியாயமற்றது என்றும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
