LATEST NEWS
“டீச்சர் இனி சாப்பிட மாட்டேன்” சிப்ஸ் சாப்பிட்டா வயிற்றில் புழு வருமா..? போலி ஸ்கேன் ஆப் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு மரண பயத்தைக் காட்டிய ஆசிரியர்கள்.. வைரலாகும் வீடியோ…!!
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எடுக்கப்பட்ட விசித்திரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அங்கு பயிலும் சிறிய குழந்தைகளுக்கு கூல்டிரிங்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகள் வழங்கப்படுகின்றன. ஜங்க் ஃபுட் எனப்படும் இந்த நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் ஆசையாகச் சாப்பிட்ட பிறகு, ஆசிரியர்கள் அவர்களை வைத்து ஒரு வினோதமான விழிப்புணர்வு சோதனையை நடத்தியுள்ளனர்.
குழந்தைகளின் வயிற்றில் போலி அல்ட்ராசவுண்ட் செயலியைப் பயன்படுத்தி சோதிப்பது போல் ஆசிரியர்கள் நடித்துள்ளனர். அந்த செயலியின் திரையில், குழந்தைகள் சாப்பிட்ட உணவினால் வயிற்றில் புழுக்கள் நெளிவது போலக் காண்பிக்கப்பட்டது. தன் வயிற்றில் புழுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகள், பயத்தில் கதறி அழத் தொடங்கினர்.
ஜங்க் ஃபுட்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தவே ஆசிரியர்கள் இந்த முறையைக் கையாண்டதாகத் தெரிகிறது. எனினும், பிஞ்சு குழந்தைகளின் மனதைப் பயமுறுத்திச் செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு முயற்சி சரியா அல்லது தவறா என சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
