LATEST NEWS
BREAKING:அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு… கோர்ட் தள்ளுபடி..!!
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்து ரத்து செய்யக் கோரி, கே.ஏ.செங்கோட்டையன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, செங்கோட்டையன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில், கோபி தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
