LATEST NEWS
“பக்கத்துல இருக்குற 3 அல்லக்கைகள் தான் பதில் சொல்றாங்க..! அதுவும் சம்பந்தே இல்லாம…” முதல்வரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பாய்ந்தது வழக்கு..!!
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் காட்டமாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய்யை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘முதலமைச்சர் கிட்ட கேள்வி கேட்டா அவருக்கு பக்கத்துல இருக்குற 3 அல்லக்கைகள் தான் பதில் சொல்றாங்க. அதுவும் சம்மந்தமே இல்லாம பதில் சொல்லுவாங்க. நீ இப்ப சேலத்துக்கு போறியான்னு கேட்டா, இல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்லுவாங்க’ என சாடினார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எம்.பி., ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
