LATEST NEWS
பகீர் ஆபத்து..! மனிதக் கட்டுப்பாட்டை மீறிய ஏ.ஐ… தனக்குத்தானே கட்டளையிட்டு கொண்டு… விஞ்ஞானிகளை அதிரவைத்த ஓபன்ஏஐ சாட்பாட்..!
மனிதக் கட்டுப்பாட்டை மீறி ஏ.ஐ. மாடல்கள் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொள்ளும் “எதிர்பாராத அல்லது கவலைக்குரிய” செயல்பாடுகள் குறித்து, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ ஆறு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் மனிதர்களின் நோக்கங்களுக்கு மாறாக செயல்படுவதை துல்லியமாகக் கண்காணித்துத் தடுக்கப் புதிய கட்டமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓபன்ஏஐ நடத்திய சோதனைகளில், ஏ.ஐ. மாடல்கள் சில வியப்பூட்டும் சுயமுடிவுகளை எடுத்துள்ளன. குறிப்பாக, ஒரு ஆராய்ச்சி மாடல் தனது கட்டுப்பாடுகளை உடைப்பதற்கான வழிமுறைகளைத் தானே உருவாக்கி, பிற சாட்பாட்களின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடத் தனக்குத்தானே கட்டளையிட்டுக் கொண்டது. மற்றொரு நிகழ்வில், விடுபட்ட தரவுகளைத் தானே உருவாக்கிக்கொண்டு, பொருந்தாத தகவல்களை மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கவும் ஏ.ஐ. முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
மனிதர்களின் கண்காணிப்பைத் தவிர்த்து ஏ.ஐ. தன்னிச்சையாகச் செயல்படும் இத்தகைய ஏமாற்றுத் தன்மைகள், மனித இனத்திற்கே ஆபத்தாக முடியலாம் என்ற கவலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், ஆபத்துகள் கைமீறிப் போவதற்குள் ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஓபன்ஏஐ மற்றும் அந்த்ரோபிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
